தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேன் திருடிய 5 பேர் கைது விருதையில் போலீஸ் அதிரடி

வேன் திருடிய 5 பேர் கைது விருதையில் போலீஸ் அதிரடி

வேன் திருடிய 5 பேர் கைது விருதையில் போலீஸ் அதிரடி


UPDATED : அக் 12, 2026 01:11 AM

ADDED : அக் 12, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 01:11 AM ADDED : அக் 12, 2026 01:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மினி வேனை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு, 37. இவரது தோஸ்த் ரக மினி வேனை, கடந்த மாதம் ஆலடி சாலையில் நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது வேன் திருடுபோனது தெரிந்தது.

ஆனந்தபாபு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் டிப்பர் டிராக்டரை திருடிய நால்வர் கைது செய்யப்பட்டனர். அதில், தே.கோபுராபுரம் ரமேஷ், பூதாமூர் செல்வசேகர் ஆகியோருக்கு தொ டர்புள்ளது தெரிந்தது.

விசாரணையில், ரமேஷ், செல்வசேகர் ஆகியோருடன் பூதாமூர் பழனிவேல் மகன் கனகராஜ், 39, உளுந்துார்பேட்டை அப்துல்லா, 44, சதீஷ், 33; விருத்தாசலம் புதுப்பேட்டை செல்வராஜ், 43, திருவாரூர் மாவட்டம், பேரளம், வைக்கங்கரை தெரு மணிகண்டன், 37, ஆகியோர் சேர்ந்து வேனை திருடியது தெரிந்தது.

விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான தனிப்படை போலீசார், நால்வரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மினி வேன் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இவர்கள் கூட்டாக மாவட்டத்தில் பல்வேறு வேன், டிராக்டர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக, எஸ் .பி., விவேகானந்த சுக்லா உத்தரவின்படி த னிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us