ADDED : செப் 06, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கனகசெட்டிக்குளம் கடற்கரை அருகில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காலப்பட்டு அடுத்த கனகசெட்டிக்குளம் கடற்கரை அருகில் 55 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த காலப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
