/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடூர் அணை திறப்பு படுகையணைகளில் போலீசார் பாதுகாப்பு
/
வீடூர் அணை திறப்பு படுகையணைகளில் போலீசார் பாதுகாப்பு
வீடூர் அணை திறப்பு படுகையணைகளில் போலீசார் பாதுகாப்பு
வீடூர் அணை திறப்பு படுகையணைகளில் போலீசார் பாதுகாப்பு
ADDED : டிச 13, 2024 06:16 AM

திருக்கனுார்: வீடூர் அணை திறப்பு காரணமாக சங்காரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள படுகையணைகளில் குவிந்திருந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழ்கப் பகுதியில் உள்ள வீடூர்அணை நிரம்பி, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் வருகையால், கைக்கிலப்பட்டு பழைய படுகையணையில் வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கடந்த சில தினங்காக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில்,தற்போது வீடு அணை திறக்கப்பட்டதால், சங்காரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருக்கனுார் மற்றும் காட்டேரிக்குப்பம் போலீசார்படுகையணை பகுதிக்கு சென்று, ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால்,அனைவரும் உடனடியாக வெளியேறும்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து அனுப்பினர். இதேபோல், மணலிப்பட்டு, செட்டிப்பட்டு படுகையணை பகுதிகளிலும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டன.
சமீபத்திய வீசிய பெஞ்சால் புயலின் போது சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.