தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிட்வா புயல் முன்னெச்சரிக்கை கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு

 டிட்வா புயல் முன்னெச்சரிக்கை கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு

 டிட்வா புயல் முன்னெச்சரிக்கை கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு


ADDED : நவ 29, 2025 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருமாம்பாக்கம் கடற்கரை பகுதிக்கு, பொது மக்கள் செல்ல தடை விதித்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் கடற்கரை பகுதி சுற்றுலா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், வங்க கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் காரணமாக கடலில் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று காலை முதல் மணப்பட்டு - மூ.புதுக்குப்பம், நரம்பை, பனித்திட்டு ஆகிய கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் செல்வதை தடுக்கும் வகையில், பாதையில் பேரிகார்டுகளை வைத்து தடுப்பு அமைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஒலி பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து, கடற்கரையில் இருந்த பொது மக்களை அப்புறப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us