/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
15 கிலோ குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி
/
15 கிலோ குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி
ADDED : ஜூலை 13, 2025 12:31 AM
புதுச்சேரி : உழவர்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மேரி உழவர்கரை பகுதியில் 2 நபர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், மேரி உழவர்கரையை சேர்ந்த பாலசுந்தரம், 40; ரெட்டியார்பாளையம், விக்னேஷ் நகர் பழனி, 60; என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 15 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, குட்கா பொருட்கள் மற்றும் 1,800 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிந்து பாலசுந்தரம், பழனி ஆகியோரை கைது செய்தனர்.

