/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஐ., பற்றாக்குறையால் காவல் நிலையங்கள் திணறல்
/
எஸ்.ஐ., பற்றாக்குறையால் காவல் நிலையங்கள் திணறல்
ADDED : டிச 15, 2024 05:34 AM
புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி., யாக பொறுப்பேற்ற சத்யசுந்தரம், சட்டம் ஒழுங்கு, டிராபிக் பிரச்னை குறித்து போலீசாரை வரவழைத்து அடிக்கடி ஆலோசனை நடத்தி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள வழக்குகள், கைது செய்யாமல் உள்ள குற்றவாளிகள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும், 3 முதல் 5 சப்இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கடந்த 2018ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நிலுவையில் உள்ள வழக்குகளை ஏட்டு, சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி கொடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் போலீசாருக்கு பயிற்சி கொடுத்து வழக்கை எழுதி முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால், சட்டம் ஒழுங்கு போலீஸ், போக்குவரத்து போலீசார் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பணியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் சட்டம் ஒழுங்கு பணியை பார்ப்பதா, வழக்குகளை எழுதி முடிப்பதா, பாதுகாப்பு பணிக்கு செல்வதா என புலம்பி வருகின்றனர்.