
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஒதியஞ்சாலை போலீசார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் போலீசாருக்கு சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கும் விழாவில் முதல்வர் ரங்கசாமி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதன்பேரில் ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அண்ணா சிலை அருகே திடீர் வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கரம் மற்றும் கார்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர்.

