தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற போலீஸ் வாகனத்திற்கு அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற போலீஸ் வாகனத்திற்கு அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற போலீஸ் வாகனத்திற்கு அபராதம்


ADDED : நவ 17, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது பொதுமக்களாக இருந்தாலும் சரி, போலீசாராக இருந்தாலும் சரி அது தவறுதான் என்பதை புதுச்சேரி போலீசார் மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளனர்.

புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில் இன்று (நவ.,17) போக்குவரத்து பிரிவு போலீஸ் வாகனம் ஒன்று, வாகனங்கள் தடையின்றி இடதுபுறம் திரும்பும் பாதையை ஆக்கிரமித்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால், அங்கிருந்தவர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து, விதியை மீறி நிறுத்தப்பட்ட போக்குவரத்து பிரிவு போலீஸ் வாகனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக நின்றிருந்த போலீஸ் வாகனத்திற்கு, தெற்கு போக்குவரத்துப் பிரிவு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலீசார் வாகனத்திற்கே அபராதம் விதிக்கப்பட்ட இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us