தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை ஆசாமி தாக்கி போலீஸ்காரர் காயம்

போதை ஆசாமி தாக்கி போலீஸ்காரர் காயம்

போதை ஆசாமி தாக்கி போலீஸ்காரர் காயம்


ADDED : ஜன 13, 2025 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுாரில் போதை ஆசாமி பீர் பாட்டிலால் தாக்கியதில், போலீஸ்காரர் காயமடைந்தார்.

கடலுார் சாவடி மதுவிலக்கு சோதனை சாவடி அருகே நேற்று முன்தினம் குடிபோதையில் வாலிபர் ஒருவர் உடைந்த பீர் பாட்டிலால் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார்.

தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீஸ்காரர்கள் விநாயகமூர்த்தி, சந்திரசேகர் ஆகியோர் சென்று வாலிபரிடம் விசாரித்தனர். அவர், நெல்லிக்குப்பம் அடுத்த சரவணபுரத்தை சேர்ந்த தினேஷ் ராஜா, 32; என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, போதை ஆசாமியின் கையில் இருந்த பீர் பாட்டிலை போலீஸ்காரர்கள் பறிக்க முயன்றனர். அப்போது, தினேஷ்ராஜா கையில் இருந்த பீர் பாட்டிலால், போலீஸ்காரர் விநாயகமூர்த்தி வயிற்றில் குத்தினார். காயமடைந்த விநாயகமூர்த்தி கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

போதையில் இருந்த தினேஷ்ராஜா கீழே விழுந்ததில் காயமடைந்தார். அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் தினேஷ்ராஜா மீது கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us