ADDED : அக் 26, 2024 06:11 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலியோ விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கம்பன் கலையரங்கம் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணியை போலீஸ் டி.ஐ.ஜி., பிரிஜேந்திர குமார் யாதவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மண்டலம் 26 உதவி கவர்னர் செந்தில்நாராயணன் முன்னிலை வகித்தார்.
பேரணியில் பாண்டிச்சேரி கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவர் முரளி, செயலாளர் தினகரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியை பாண்டிச்சேரி எலைட் ரோட்டரி சங்கம், பாண்டிச்சேரி பீனிக்ஸ் ரோட்டரி சங்கம், பாண்டிச்சேரி டிசைன் சிட்டி ரோட்டரி சங்கம், பாண்டிச்சேரி மெரினா ரோட்டரி சங்கம், பாண்டிச்சேரி பிரெண்ட்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் உள்ளிட்டவை இணைந்து நடத்தியது.
இதில், சாரதா கங்காதரன் கல்லுாரி, ராக் கலை கல்லுாரி, கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கம்பன் கலையரங்கம் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணி, ராஜா தியேட்டர், நேரு வீதி, மிஷன் வீதி வழியாக மீண்டும் கம்பன் கலை அரங்கில் முடிவடைந்தது.