sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சலங்கை கட்டி ஆடிய அரசியல் பிரமுகர்கள் 'சைலண்ட் மோடு'

/

 சலங்கை கட்டி ஆடிய அரசியல் பிரமுகர்கள் 'சைலண்ட் மோடு'

 சலங்கை கட்டி ஆடிய அரசியல் பிரமுகர்கள் 'சைலண்ட் மோடு'

 சலங்கை கட்டி ஆடிய அரசியல் பிரமுகர்கள் 'சைலண்ட் மோடு'


ADDED : மார் 08, 2026 03:35 AM

Google News

ADDED : மார் 08, 2026 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சலங்கை கட்டி ஆடிய அரசியல் பிரமுகர்கள் காங்., தி.மு.க., கூட்டணி முடிவால் 'சைலண்ட் மோடில் உள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு முதல் இண்டி கூட்டணியில் உள்ள காங்., மற்றும் தி.மு.க.,வில் முன்னணி நிர்வாகிகள் சிலர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, தங்கள் தொகுதிகளில் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு பட்டாசு, மளிகை பொருட்கள், பாத்திரங்கள், காலண்டர் உள்ளிட்ட பொருட்களை வீடு, வீடாக சென்று கொடுத்து ஆதரவு திரட்டி வந்தனர். மேலும், பெண்களுக்கு கோலப்போட்டி, மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகளை வாரி வழங்கினார்.

மேலும், தேர்தலில் சீட் பெறுவதற்காக தங்கள் கட்சி தலைவர்களை திருப்தி படுத்தும் வகையில் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இண்டி கூட்டணியில் உள்ள காங்., - தி.மு.க., இடையே கூட்டணி முடிவாகி விரைவில் சீட்டு ஒதுக்கீடு நடைபெற உள்ளது. அதில் ஒரு சில தொகுதிகளை தவிர பிற தொகுதிகள் கடந்த தேர்தலில் எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டதோ, மீண்டும் அதே கட்சிக்கு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இரு கட்சி அரசியல் பிரமுகர்களும் எந்த கட்சிக்கு சென்றால் சீட்டு கிடைக்கும் என்று ஆழ்ந்த யோசனையில் கவலையுடன் சைலண்ட் மோடில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us