/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராமப்புறங்களில் அரசியல் கட்சிகள் மந்தம்
/
கிராமப்புறங்களில் அரசியல் கட்சிகள் மந்தம்
ADDED : மார் 20, 2024 01:40 AM
புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலில், அதிகாரிகள் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், கிராமப்புறங்களில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் மந்தமாக உள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, புதுச்சேரி மாநில தேர்தல் துறை அதிகாரிகள் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடி அமைந்து தீவிர வாகன சோதனை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆனால், காங்., கூட்டணி மற்றும் என்.ஆர்.காங்., கூட்டணி கட்சிகளில் வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம் ஏற்பட்டு, இதுவரையில் அறிவிக்கப்படாமல் உள்ளனர்.
இதனால், கிராமப்புறங்களில் உள்ள அரசியல் கட்சியினர் யாரும் தேதி அறிவிக்கப்பட்டும் எந்தவித கட்சி பணிகளையம் மேற்கொள்ளாமல் மந்தமாக இருந்து வருகின்றனர்.மேலும், சில நிர்வாகிகள் தங்களது சொந்த வேலைகளில் ஆர்வம் காட்டி பிசியாக இருந்து வருகின்றனர்.

