ADDED : மார் 23, 2026 08:17 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு தினமான வரும் 9ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சார்பு செயலர் கிரண் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 9 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், சட்டசபை தேர்தலில் ஓட்டுரிமையை பயன்படுத்தும் வகையில், கவர்னர் கைலாஷ்நாதன், தேர்தல் தினமான 9 ம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
அதன்படி, நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட பிரிவு '135 பி'-ன் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அமையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
