பசுமை விருதுக்கு விண்ணப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் அழைப்பு
பசுமை விருதுக்கு விண்ணப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் அழைப்பு
ADDED : மே 06, 2025 04:57 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றிய தொழிற்சாலைகள் 'பசுமை விருதுக்கு-2025' விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மாசுக்கட்டுப்பாட்டுக் குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாசு சுட்டுப்பாட்டுக் குழுமம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுற்றுச்சூழலைப் பேணுவதிலும், அது தொடர்பான பணிகளில் குறிப்பிடத்தக்க அளவு பணியாற்றிய மற்றும் மாசைக் கட்டுப்படுத்துவதற்கு நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திய தொழிற்சாலைக்குப் 'பசுமை விருது வரும் ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தின விழாவின் போது வழங்கத் திர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் சிறப்புறப் பணியாற்றிய தொழிற்சாலைகளிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப்படிவம் இத்துறையின் புதுச்சேரி அலுவலகம் மற்றும் காரைக்கால் பிராந்திய அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இக்குழுமத்தின் https://dste.nv.gov.in/ppcc/pdf/Green-Award-2025 என்ற இணையதளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உறுப்பினர் செயலர், புதுச்சேரி மாக கட்டுப்பாட்டுக் குழுமம், 3வது மாடி, வீட்டு வசதி வாரிய வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி-5. என்ற முகவரிக்கு வரும் மே மாதம் 15ம் தேதி மாலை 5;00 மணிக்குள் கிடைக்கப்பெறுமாறு அனுப்புதல் வேண்டும்.
விருதுக்குரிய அடிப்படை தகுதி:
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க சாதனை படைத்த, நகுதியுள்ள தொழிற்சாலைகளுக்கு விருது பெறுவதில் நிபந்தனைகள் உள்ளன. பின்வரும் பட்டியல், எடுத்துக்காட்டுவதாகும். மாசு அடைதலைக் கட்டுப்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் பேணுதல், உற்பத்தி பொருள், சுற்றுச்சூழலை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்.
மரம் வளர்த்தல், கழிவு நீர் சுத்திகரித்தல் மற்றும் எரிசக்தி பயன்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதனை, தொழிற்சாலை எய்திய இலக்கு, பணிக்காலம். நிறுவன பணியின் தன்மை மற்றும் அதன் முடிவுகளின் தரமான மற்றும் அளவு மதிப்பீடு பற்றிய தகவல் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், பாதுகாத்தலில் செய்த பணிகள், தொடர்பான உபயோகமான பிற தகவல்கள். தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
