ADDED : ஆக 05, 2011 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சி சார்பில் பாரதி பூங்காவில் ரோஜா தோட்டம்
அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோஜா தோட்டத்தில்
உள்ளாட்சித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் சபாபதி ஆகியோர் ரோஜா
கன்றுகளை நட்டனர். பாரதி பூங்காவில் சபாநாயகர், அமைச்சர் மற்றும்
எம்.எல்.ஏ.,பெரியசாமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில்
உள்ளாட்சித்துறை இயக்குனர் பாலசுப்ரமணியன், தனிச்செயலாளர் அசோகன், நகராட்சி
ஆணையர் அழகிரி, செயற்பொறியாளர் மலைவாசன், உதவி பொறியாளர் சரவணன், பூங்கா
கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.