/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிரடிப்படை அலுவலகத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை
/
அதிரடிப்படை அலுவலகத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை
ADDED : ஆக 09, 2011 02:52 AM
புதுச்சேரி : அரியாங்குப்பம் காவலர் குடியிருப்பில் இயங்கும் சிறப்பு அதிரடிப்படை அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காவலர் பொது நல இயக்க பொதுச் செயலாளர் கணேசன், டி.ஐ.ஜி.,யிடம் அளித்துள்ள மனு:அரியாங்குப்பம் போலீஸ் குடியிருப்பு ஜே பிளாக் பகுதியில், ஊரக சிறப்பு அதிரடிப்படை அலுவலகம் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடிப்படை என்றாலே, ஒரு குற்றவாளியை அழைத்து வந்து, சில நாட்கள் விசாரித்து, அதன் மூலம் குற்றவாளியை கைது செய்வார்கள்.விசாரணையில் இருக்கும்போது, அவரைப் பார்க்க மற்ற குற்றவாளிகள் கூட்டமாக வருவார்கள். இவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் காவலர் குடியிருப்பில் ஆங்காங்கே உலவிக் கொண்டிருப்பார்கள். அப்போது, குடியிருப்பில் உள்ள பெண்களும் குழந்தைகளும் வெளியே செல்ல அச்சப்படுவார்கள். மேலும் குற்றவாளிகள் விளையாட்டுப் பொருட்கள் போல், வெடி பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்க வாய்ப்புள்ளது.எனவே, அசம்பாவிதம் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடியிருப்பில் இருக்கும் காவலர் குடும்பங்களின் நலன் கருதி அதிரடிப்படை அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

