ADDED : ஆக 11, 2011 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:கோஜிரியோ கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற
மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த
விழாவிற்கு மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்க செயலாளர் சென்சாய் வளவன் தலைமை
தாங்கினார்.
கோஜிரியோ கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளர் சென்சாய்
சுந்தர்ராஜன், கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும்
சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.விழா ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள்
செய்திருந்தனர்.