/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு கண் சிகிச்சை முகாம்
/
மாணவர்களுக்கு கண் சிகிச்சை முகாம்
ADDED : ஆக 11, 2011 02:52 AM
புதுச்சேரி:வீரமாமுனிவர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்
சிகிச்சை முகாம் நடந்தது.ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி சென்ட்ரல் மற்றும்
ஜோதி கண் மருத்துவமனை மையம் ஆகியன இணைந்து நேற்றுமுன்தினம் பள்ளியில் இலவச
கண் பரிசோதனை முகாமை நடத்தியது. ரோட்டரி அமைப்பின் துணை ஆளுனர் சிவராஜ்
முகாமை துவக்கி வைத்தார். முகாமில் சிறப்பு விருந்தினராக ஜோதி கண்
மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் வனஜா வைத்தியநாதன் கலந்து கொண்டார்.
முகாமில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை நடத்தப்பட்டது.
முகாமில் ரோட்டரி அமைப்பின் தலைவர் சுரேஷ், செயலாளர் அசோக், ரோட்டரி
சிகிச்சை முகாமின் இயக்குனர் சம்பத், பள்ளியின் தலைமையாசிரியர் மதிவாணன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.