sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் எப்.சி.ஐ., செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

/

புதுச்சேரியில் எப்.சி.ஐ., செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

புதுச்சேரியில் எப்.சி.ஐ., செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

புதுச்சேரியில் எப்.சி.ஐ., செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்


ADDED : ஆக 11, 2011 02:53 AM

Google News

ADDED : ஆக 11, 2011 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரியில் இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, இந்திய உணவுக் கழக உறுப்பினர் சுந்தரமூர்த்தி கூறினார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.,) சிறந்த முறையில் செயல்படுவதற்கு, உணவு தானியங்கள் கொள்முதல் மற்றும் வினியோகம் செய்தல், குடோன்களில் தானியங்களை பராமரித்தல், தானிய கடத்தலில் ஈடுபடும்போது அதனைத் தடுத்தல், பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்படும் அரிசியை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய உணவுத்துறை அமைச்சகம் ஆலோசனைக் குழு உறுப்பினர்களை நியமனம் செய்தது.மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், புதுச்சேரி இந்திய உணவுக் கழகத்திற்கு என்னை ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம் செய்தார். நியமனம் செய்த 22 மாதங்களில் கமிட்டி இதுவரை செயல்படவில்லை. இதுசம்பந்தமாக முதல்வர் ரங்கசாமி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதுவரை இந்திய உணவுக் கழகம், மில் அதிபர்களிடம் கொள்முதல் செய்த அரிசியின் மொத்த அளவு, கழகத்திற்கு யார் யார் எவ்வளவு அரிசி விற்றுள்ளனர், ரேஷன் அரிசி கலப்படம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கழகத்தின் கொள்முதல் மற்றும் வினியோகம் குறித்த கணக்குகளை சி.பி.ஐ., ஆய்வு செய்ய வேண்டும். இழப்பீட்டிற்குண்டான தொகையை உரியவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது தமிழகத்தைப் போன்று குண்டர் சட்டத்தை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழகத்திற்கு பலகோடி இழப்பீடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கழகத்திடம் இருந்து பெறப்படும் தரமான அரிசியை வெளிச்சந்தையில் விற்று விட்டு, தமிழக ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து அவற்றை மீண்டும் கழகத்திற்கு கொடுப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கழக குழு நிர்வாகிகள் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us