sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க., அ.தி.மு.க., வெளிநடப்பு

/

புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க., அ.தி.மு.க., வெளிநடப்பு

புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க., அ.தி.மு.க., வெளிநடப்பு

புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க., அ.தி.மு.க., வெளிநடப்பு


ADDED : செப் 04, 2011 01:40 AM

Google News

ADDED : செப் 04, 2011 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபையில் இலங்கை பிரச்னை தொடர்பாக பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தி.மு.க., அ.தி. மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில் நேற்று காலை கேள்வி நேரம் முடிந்தவுடன், ஜீரோ நேரத்தில் எம்.எல்.ஏ.,க் கள் பேசினர். அப்போது, தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம், இலங்கை பிரச்னை தொடர்பாக பேசினார்.நாஜிம் பேசுவதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் சபாபதி, அவர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நந்தா சரவணன் ஆகிய இருவரும் வெளிநடப்பு செய்தனர்.அப்போது, அ.தி. மு.க., எம்.எல்.ஏ.,க் கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், புரு÷ஷாத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோரும் ஒட்டுமொத்தமாக எழுந்து இலங்கை பிரச்னை தொடர்பாக பேசினர். அவர்களுக்கும் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 'கோர்ட்டில் இருக்கும் விஷயத்தை இந்த சபையில் பேசுவது சரியாக இருக்காது' என, சபாநாயகர் தெரிவித்தார். சபாநாயகரை நோக்கி சென்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், அவரது இருக்கைக்கு எதிரில் அமர்ந்து தர்ணா நடத்தினர். அவர்களை தங்களது இருக்கைக்கு திரும்புமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கோஷம் எழுப்பிய அ .தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இதுகுறித்து அன்பழகன் எம்.எல்.ஏ., கூறும்போது, 'இலங்கையில் தமிழின படுகொலை செய்தவர்களை போர் குற்றவாளி என அறிவிக்கவும், தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும்வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும் வலியுறுத்தி வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். மூவரின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து ஆயுள் தண்டனையாக, ஜனாதிபதி குறைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோல புதுச்சேரி சட்டசபையிலும் தீர்மானம் கொண்டு வருமாறு கேட்டோம். தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், பேசுவதற்கு அனுமதிக்காததை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம்' என்றார்.






      Dinamalar
      Follow us