/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏழை மக்களுக்கு சிவப்பு கார்டு பாஸ்கர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
ஏழை மக்களுக்கு சிவப்பு கார்டு பாஸ்கர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ஏழை மக்களுக்கு சிவப்பு கார்டு பாஸ்கர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ஏழை மக்களுக்கு சிவப்பு கார்டு பாஸ்கர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2011 01:41 AM
புதுச்சேரி:'வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு கார்டு வழங்க
வேண்டும்' என, பாஸ்கர் எம்.எல்.ஏ., கூறினார்.பட்ஜெட் மீதான விவாதத்தில்
அவர் பேசியதாவது:எம்.எல்.ஏ.,க்களுக்கு நியமிக்கப் படும் உதவியாளர்களை, 5
ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில்,
இடத்திற்கு வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்கு ஒரிஜினல் பத்திரம்
கேட்கின்றனர். அதைப் பெற ஒரு வாரம் ஆகிறது. தமிழகத்தில் இதை 'ஆன் லைன்'
முறையில் கொண்டு வந்து விட்டனர். அதுபோல புதுச்சேரியிலும் செயல்படுத்த
வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றனர். நாம் தேடிச்
சென்றாலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப் பதில்லை. ரேஷன் கடைகளை
ஊழியர்கள் நினைத்த நேரத்திற்கு திறக்கின்றனர். எந்தெந்தப் பொருள் எப்போது
வழங்கப்படும் என தெரிவிப்பதில்லை. பொருள் வாங்கச் செல்லும் மக்களை
எடுத்தெறிந்து பேசுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.உண்மையாக வறுமைக்
கோட்டில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மஞ்சள்நிற ரேஷன் கார்டு
வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு சிவப்புநிற கார்டு வழங்க வேண்டும்.குற்றச்
சம்பவங்களில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து, கோர்ட்டில் வாதாடி
சரியான தண்டனை பெற்றுத் தருவதில்லை, அதனால்தான் குற்றங்கள் பெருகுகின்றன.
இளைஞர்கள் வீணான வழியில் செல்வதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.அரசு பொது மருத்துவமனையில் சிபாரிசு இருந்தால்தான் சிடி., ஸ்கேன்,
எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. சனி, ஞாயிறு கிழமைகளில்
சிறப்பு நிபுணர்கள் வருவதில்லை. முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை
மேம்படுத்தி, ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு பாஸ்கர் பேசினார்.