/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலாமாண்டுமாணவர்களுக்குவரவேற்பு விழா
/
முதலாமாண்டுமாணவர்களுக்குவரவேற்பு விழா
ADDED : செப் 04, 2011 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:ராமநாதபுரத்தில் உள்ள எஸ்.ஜே.எஸ். பால் மெமோரியல் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் டாக்டர் கிறிஸ்டி வரவேற்றார். சாம்பால் கல்வியியல் நிறுவன
மேலாண்மை இயக்குனர் டாக்டர் பால் தலைமை தாங்கி, மாணவர்கள் பின்பற்ற
வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார்.மேலும், நான்கு ஆண்டு குறிக்கோளுடன்
படித்தால், எதிர்காலத்தில் நல்ல வேலையில் சேரலாம் என்பது குறித்தும்
விளக்கினார். மாணவர்களை ஜோஷ்வா சாமுவேல் ஆசீர்வதித்து பேசினார். துணை
இயக்குனர் குமாரவேல், சாம்பால் கல்வியியல் குழுமத்தை சேர்ந்தவர்கள் கலந்து
கொண்டனர்.