sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முருகேச நகரில் அடுக்குமாடி குடியிருப்புபுதுப்பேட்டை இந்திய கம்யூ., கோரிக்கை

/

முருகேச நகரில் அடுக்குமாடி குடியிருப்புபுதுப்பேட்டை இந்திய கம்யூ., கோரிக்கை

முருகேச நகரில் அடுக்குமாடி குடியிருப்புபுதுப்பேட்டை இந்திய கம்யூ., கோரிக்கை

முருகேச நகரில் அடுக்குமாடி குடியிருப்புபுதுப்பேட்டை இந்திய கம்யூ., கோரிக்கை


ADDED : செப் 15, 2011 04:10 AM

Google News

ADDED : செப் 15, 2011 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுப்பேட்டை முருகேச நகரில் அரசு ஆர்ஜிதம் செய்த இடத்தில் வீடற்ற ஏழைகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூ., புதுப்பேட்டை கிளை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.இந்திய கம்யூ., புதுப்பேட்டை கிளை மாநாடு ராமையா மன்றத்தில் நடந்தது. செங்கேணி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் தாஸ் அறிக்கை வாசித்தார். தேசியக்குழு உறுப்பினர் விசுவநாதன், சேதுசெல்வம், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளை செயலாளராக முத்துராமன், துணைச் செயலாளராக முருகன், பொருளாளராக சண்முகம், கமிட்டி உறுப்பினர்களாக முருகன், பாஸ்கர், அருண், முருகையன், பெரியநாயகம், லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், புதுப்பேட்டை முருகேச நகரில் அரசு ஆர்ஜிதம் செய்த இடத்தில் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச அடுக்குமாடி குடியிருப்பு அல்லது இலவச மனைப்பட்டா வழங்கிட வேண்டும். புதுப்பேட்டை கோவில் நிலத்தில் வாழும் மக்களுக்கு காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிட வேண்டும். புதிய டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வேண்டும். விரிவாக்கப்பகுதிகளில் சாலை அமைக்க வேண்டும். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு விரைவாக நலவாரியம் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us