/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மர்ம வெடி சத்தம்மக்கள் அலறியடித்து ஓட்டம்
/
புதுச்சேரியில் மர்ம வெடி சத்தம்மக்கள் அலறியடித்து ஓட்டம்
புதுச்சேரியில் மர்ம வெடி சத்தம்மக்கள் அலறியடித்து ஓட்டம்
புதுச்சேரியில் மர்ம வெடி சத்தம்மக்கள் அலறியடித்து ஓட்டம்
ADDED : செப் 16, 2011 03:21 AM
புதுச்சேரி:புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியில் நேற்று மாலை 6.30
மணியளவில் திடீரென்று பலத்த வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து அப்பகுதி
பொதுமக்கள் பலர் அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
அப்பகுதியினர் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரகுநாயகம், சப் இன்ஸ்பெக்டர்
செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து, சாமிபிள்ளைத்தோட்டம்
பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு சத்தம்
எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. உண்மையில் அது வெடிகுண்டு வெடித்த
சத்தமா அல்லது பட்டாசு வெடித்த சத்தமா என்று தெரியவில்லை.தொடர்ந்து அங்கு
பதட்டம் ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.