/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்துவிழிப்புணர்வு முகாம்
/
போக்குவரத்துவிழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 18, 2011 11:37 PM
புதுச்சேரி:அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை
சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமின் ஒரு பகுதியாக, போக்குவரத்து போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் வேலய்யன்
தலைமையில், ராஜிவ் சிக்னலில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த
துண்டுப்பிரசுரங்களை மாணவர்கள் வினியோகம் செய்தனர். மேலும் மது அருந்தி
விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில்
ஒட்டினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக இயக்குனர் முருகதாஸ், கல்லூரி
முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர் ஆரோக்கியநாதன் ஆகியோர் செய்தனர்.திட்ட
அலுவலர்கள் கரிகாலன், ராஜேஷ் ஆகியோர் மாணவர்களை வழிநடத்தினர்.