/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள்காலவரையற்ற வேலை நிறுத்தம்
/
பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள்காலவரையற்ற வேலை நிறுத்தம்
பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள்காலவரையற்ற வேலை நிறுத்தம்
பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள்காலவரையற்ற வேலை நிறுத்தம்
ADDED : செப் 21, 2011 11:28 PM
புதுச்சேரி:புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் காலவரையற்ற வேலை
நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.புதுச்சேரி பொறியியல் கல்லூரி
பேராசிரியர்கள், ஆறாவது ஊதியக் குழு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து
நேற்று முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.
சங்கத் தலைவர் நரசிம்மன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரகோத்தமன்,
செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் நித்தியானந்தன்,
பொருளாளர் முருகபிரகாஷ் வாழ்த்தி பேசினர். ஆறாவது ஊதிய குழு
பரிந்துரைத்துள்ள நிலுவை தொகை வழங்காமல் இழுத்தடிப்பதற்கு கண்டனம்
தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆறாவது ஊதியக் குழுவின் 48 சதவீத நிலுவைத் தொகையை வழங்க
அரசாணை வெளியிட வேண்டும். கல்லூரிக்கு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும்.
காலியாக உள்ள பதிவாளர், உதவி பதிவாளர் பதவிகளை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.