/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தாலம்மன் கோவிலில் சூரன் வதம் கலைநிகழ்ச்சி
/
முத்தாலம்மன் கோவிலில் சூரன் வதம் கலைநிகழ்ச்சி
ADDED : அக் 08, 2011 12:22 AM
புதுச்சேரி:வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில்
சூரன் வதம் செய்யும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.முத்தாலம்மன் கோவிலில்
நவராத்திரி விழாவையொட்டி கடந்த 30 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று
வருகிறது.
பத்தாவது நாளான நேற்று முன்தினம் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி
நடந்தது. இதில் சரஸ்வதி, லட்சுமி, ராஜேஸ்வரி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி,
கெஜலட்சுமி, மகாலட்சுமி, தைரியலட்சுமி, யோகலட்சுமி ஆகிய ஒன்பது
அவதாரங்களில் பள்ளி சிறுமிகள் அலங்கரிக்கப்பட்டு சூரனை வதம் செய்யும்
காட்சி அமைக்கப்பட்டது. இதனை ஏரளாமான பக்தர்கள் கண்டுகளித்தனர். விழாவில்
கலந்து கொண்டவர்களுக்கு ஜாக்கெட் பிட், மஞ்சள் கயிறு, பிரசாதம்
வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

