/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பரங்கிப்பேட்டைக்கு காரில்கடத்திய மதுபாட்டில் சிக்கியது
/
பரங்கிப்பேட்டைக்கு காரில்கடத்திய மதுபாட்டில் சிக்கியது
பரங்கிப்பேட்டைக்கு காரில்கடத்திய மதுபாட்டில் சிக்கியது
பரங்கிப்பேட்டைக்கு காரில்கடத்திய மதுபாட்டில் சிக்கியது
ADDED : அக் 08, 2011 12:24 AM
கிருமாம்பாக்கம்:கன்னியக்கோவிலில் இருந்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது
பாட்டில்களை காரில் கடத்திச் சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த முள்ளோடையில் நேற்று முன்தினம் இரவு கிருமாம்பாக்கம் சப்
இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது கன்னியக்கோவிலில் இருந்து கடலூர் மார்க்கமாக சென்று
கொண்டிருந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அதில் காரில் மறைத்து வைத்திருந்த 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த
வண்ணார்பாளையத்தை சேர்ந்த ஜட்ஜ், 28, என்பவரை கைது செய்தனர். உள்ளாட்சித்
தேர்தலை முன்னிட்டு பரங்கிப்பேட்டைக்கு மதுபாட்டில்களை கடத்தியதாக
தெரிவித்தார்.
கிருமாம்பாக்கம் போலீ சார் மதுபாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோவை கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.