/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாக் கமிட்டி ஆய்வு
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாக் கமிட்டி ஆய்வு
ADDED : அக் 13, 2011 02:04 AM
புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாக் கமிட்டி முகாமிட்டு தர ஆய்வு
மேற்கொண்டு வருகிறது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2006 ஆண்டு நாக்
கமிட்டி ஆய்வு மேற்கொண்டு ஆ++ தரச் சான்றிதழ் ஐந்தாண்டுகளுக்கு வழங்கியது.
தர சான்றிதழ் காலம் முடிந்ததையடுத்து பல்கலைக்கழகம் சார்பில் சுய மதிப்பீடு
செய்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மீண்டும்
விண்ணப்பிக்கப்பட்டது.விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நாக் கமிட்டி, கர்நாடாக
முன்னாள் துணை வேந்தர் சைதாபுதீர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைத்தது.
இக்குழுவில் சஞ்சய், நாகராஜ், சிங்,சர்மா, வந்தனா சக்ரபர்த்தி, அலோக்,
கிருஷ்ணா குப்தா, ஹரகாபால், சுப்பிரியா சவுந்திரி, கர்மிசு, ஹரிஸ்குமார்
ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.நான்கு நாள் ஆய்வு பயணமாக நேற்று புதுச்சேரி
பல்கலைக் கழகத்திற்கு வந்த நாக் கமிட்டி குழுவினருக்கு பல்கலைக்கழக
வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த கலந்தாய்வு
கூட்டத்தில் நாக் கமிட்டி, உயரதிகாரிகள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.
துணைவேந்தர் தரீன் பல்கலைக்கழகத்தின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகளை
துறை வாரியாக பட்டியலிட்டார். பின் நாக் கமிட்டி குழுவினர் மூன்று
பிரிவுகளாக பிரிந்து தமிழ், இயற்பியல் உள்பட பல்வேறு துறைகளில் ஆய்வு
மேற்கொண்டனர். வரும் 15ம்தேதி வரை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வு
மேற்கொள்ளும் நாக் கமிட்டினர் விரிவான ஆய்வறிக்கை தயாரித்து நாக் கமிட்டி
கவுன்சிலில் சமர்பிக்க உள்ளனர். இதன் பிறகே புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு
வழங்கப்படும் தர சான்றிதழ் பற்றி தெரியவரும்.

