/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் டி-20 கிரிக்கெட் போட்டி
/
பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் டி-20 கிரிக்கெட் போட்டி
பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் டி-20 கிரிக்கெட் போட்டி
பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் டி-20 கிரிக்கெட் போட்டி
ADDED : செப் 19, 2024 02:07 AM

புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் டி-20 லீக் மற்றும் நாக்கவுட் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 24ம் தேதி போலீஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடந்து வருகிறது.
கடந்த 17ம் தேதி வீராம்பட்டினம் அபீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 15வது போட்டியில் உப்பளம் ராயல்ஸ் அணி, உருளையன்பேட் டைகர்ஸ் அணி மோதியது.
முதலில் பேட்டிங் செய்த உருளையன்பேட் டைகர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரதீஷ் 32 ரன்களும், அருண் 23 ரன்களும் எடுத்தனர்.
உப்பளம் ராயல்ஸ் அணியின் அஜய், செந்தில் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
பின் களமிறங்கிய உப்பளம் ராயல்ஸ் அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் மூர்த்தி 41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்து, ஆட்டநாயகன் விருது பெற்றனர்.
16வது போட்டியில் திருவண்டார்கோயில் டைட்டன்ஸ் அணி, குமாரபாளையம் வாரியர்ஸ் அணி மோதியது. முதலில் களமிறங்கிய திருவண்டார் கோவில் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
குமாரபாளையம் அணியின் சோமு 3 விக்கெட்கள், சீனிவாச பெருமாள் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
பின் களமிறங்கிய குமாரபாளையம் வாரியர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் சீனிவாச பெருமாள் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
18ம் தேதி நடந்த 17வது போட்டியில் வீராம்பட்டினம் ஷார்க்ஸ் கிரிக்கெட் அணி, உப்பளம் ராயல்ஸ் அணி மோதியது. முதலில் களமிறங்கிய உப்பளம் ராயல்ஸ் அணி 17 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அஜய் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். ரிஸ்வான் 4 விக்கெட்கள் எடுத்தனர்.
பின் களம் இறங்கிய வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியில் 47 பந்துகளில் ஏழு பவுண்ட்ரிகள், 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுத்த தென்னவனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
போட்டியின் ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள்கணேஷ், முகிலன், குமாரவேல், கதிர்வேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.