/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோலிய எரிசக்தி நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலை., ஒப்பந்தம்
/
பெட்ரோலிய எரிசக்தி நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலை., ஒப்பந்தம்
பெட்ரோலிய எரிசக்தி நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலை., ஒப்பந்தம்
பெட்ரோலிய எரிசக்தி நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலை., ஒப்பந்தம்
ADDED : ஜூலை 27, 2025 12:23 AM

புதுச்சேரி : விசாகப்பட்டினம் இந்திய பெட்ரோலியம் எரி சக்தி நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கல்வி, ஆராய்ச்சியில் பரஸ்பர ஒத்துழைப்பிற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
துணை வேந்தர் பிரகாஷ்பாபு கூறுகையில், 'புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்வி, ஆராய்ச்சி தொடர்பாக சூழலை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தியை நிவர்த்தி செய்ய மாற்றத்தக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பணியாற்று வோர். இதன் மூலம் தேசிய மற்றும் உலக அளவில் செயல்படுத்த கூடிய தீர்வுகளை உருவாக்குவோம்.
இந்த ஒப்பந்தம் மூலம் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், மாணவர் பரிமாற்ற திட்டங்கள், நிபுணர் சிறப்பு சொற்பொழிவுகள், மாணவர் பயிற்சிகள், ஆய்வக அணுகல், மேம்பட்ட கல்வி, ஆராய்ச்சியில் பரஸ்பர ஒத்துழைப்பு கிடைக்கும்' என்றார்.
விசாகப்பட்டினம் இந் திய பெட்ரோலியம் எரிசக்தி நிறுவன இயக்குநர் ஷாலிவாஹன் கூறுகையில், 'இந்த புரிந்துணர்வு ஒப்பந்த மூலம் எங்களின் அதிநவீன சோதனை வசதிகள், புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு கிடைக்கும். இதன் வழியாக பல்கலைக்கழகத்திற்கு வலுவான கல்வி அடித்தளம், ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்' என்றார்.
புவி அறிவியல் துறையின் புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர் சைலேந்திர சிங், பேராசிரியர் சீனிவாச மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

