/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 17, 2026 05:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் திலகவதி தலைமை தாங்கினார். துணை பொது மேலாளர் சம்பத் முன்னிலை வகித்தார். விழாவில், பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் பாரம்பரிய உடையணிந்து, பொங்கல் வைத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 14ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு ரூபாய் மதிப்புள்ள புதிய சிம் கார்டு இலவசமாக பெற்று கொள்ளலாம். இந்த சிம்காட்டில் 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் இலவசம். மாதம் 625 ரூபாய் அதிவேக இன்டர்நெட் திட்டத்தில், 50 எம்.பி.பீ.எஸ்., வரையிலும், 600 ஜி.பி. டேட்டா கிடைக்கும். மேலும், மாதம் 999 ரூபாயாக இருந்த கட்டணம், 12 மாத முன்பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 799 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இணைய வேகம் 200 எம்.பி.பீ.எஸ்.,வரையிலும், டேட்டா வரம்பு மாதம் 5000 ஜி.பி. யாகும். இந்த சலுகை புதிய வாடிக்கையாளர்கள் குறைந்த திட்டங்களில் இருந்து மேம்படுத்துவோருக்கும் பொருந்தும்.
சலுகை காலம் கடந்த 14ம் தேதி முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

