/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாய் கேரியர் நிறுவனத்தில் பொங்கல் விழா
/
சாய் கேரியர் நிறுவனத்தில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2025 06:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகில் இயங்கி வரும் சாய் கேரியர் பவர் வேலைவாய்ப்பு தேர்வுகள் பயிற்சி நிறுவனத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
நிறுவன மேலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். முத்துகோவிந்தகுமாரி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக ரவி, உமா ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து இப்பயிற்சி நிறுவனத்தில் பயின்று யு.டி.சி, வங்கி எழுத்தர், வங்கி அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சேர்ந்துள்ள 14 முன்னாள் மாணவர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், திறன் மேம்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், பயிற்சியாளர் நரேஷ்குமார், குமாரி, ஜெகஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

