ADDED : ஜன 13, 2025 04:22 AM

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் சேர்மன் கிரண்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் எழிலரசி வரவேற்று, புதுப்பானையில் பொங்கலிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கூட்டு வழிபாடு செய்தனர். விழாவையொட்டி, நடத்தப்பட்ட கோலப் போட்டியில், பெற்றோர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் சிவா, முன்னாள் கவுன்சிலர் திருமுருகன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் முத்து அய்யாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியின் நடுவர்களாக டிவிலைட் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஜீவிதா முருகன், சிவன் பரதநாட்டிய பள்ளி நிர்வாகிகள் சுந்தரி, ஸ்ரீதேவி ஆகியோர் சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியை உமா நன்றி கூறினார்.