ADDED : ஜன 16, 2024 06:38 AM

பாகூர் : தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், பள்ளி மேலாண் இயக்குனர் கிரண்குமார் தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் எழிலரசி வரவேற்று, புதுப்பானையில் பொங்கலிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழிபட்டனர். விழாவையொட்டி நடத்தப்பட்ட கோலப் போட்டியில், பெற்றோர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
பா.ஜ., மகளிரணி பொருளாளர் பிரியா, என்.எம்.எஸ். கிராண்ட் மேலாண் இயக்குனர் விஜயலட்சுமி கிருஷ்ணராஜ், டிவிலைட் இன்போ சொலுயூஷன் மேலாண் இயக்குனர் ஜீவிதா முருகன், இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஸ்ரீவித்யா, சிவ சலங்கை நாட்டியாலயா நிறுவனர் ஸ்ரீதேவி, டாட்டா ஏ.ஐ.ஜி சீனியர் பிசினஸ் அசோசியேட் மணிமேகலை, கலை முதியோர் இல்ல நிர்வாகி கலைவாணி ஆகியோர் சிறந்த கோலங்களை தேர்வு செய்து பரிசுகளை வழங்கினர்.
மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியர்களும், மாணவர்களும் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் விமல்ராஜ், தினேஷ்பாபு, கார்முகிலன் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
தலைமையாசிரியர் உமா நன்றி கூறினார்.