/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை தொகுதியில் பொங்கல் விழா பரிசளிப்பு
/
உழவர்கரை தொகுதியில் பொங்கல் விழா பரிசளிப்பு
ADDED : ஜன 18, 2024 03:57 AM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் உள்ள அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் தொகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அதன்படி இம்மாதம் கனமழையால் பாதிக்கப்பட்டஜவஹர் நகர், பாவாணர் நகர் தொகுதி மக்களுக்கு பணம், பால், பிரட் போன்ற உதவிகளை வழங்கினர்.தொடர்ந்து பொங்கல் விழாவை முன்னிட்டு 14ம் தேதி முத்துப்பிள்ளை பாளையத்தில் உள்ள குடும்பத்தினர்களுக்கு பணம் மற்றும் பொங்கல் பரிசுகளை பிரபாதேவி வீரராகு வழங்கினார்.
நேற்று உழவர்கரை தொகுதியில் உள்ள ஜே.ஜே., நகரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நடந்த கோலப் போட்டியில் 100க்ம் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்ட் நிறுவனர் ஐ.ஜி வீரராகு, அவரது துணைவி பிரபாதேவி முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கிரைண்டர், மிக்சி, மின்சார அடுப்பு மற்றும் பணம் வழங்கினர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு புடவை, பணம் வழங்கப்பட்டது.