ADDED : ஜன 17, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று பொங்கல் விழா நடந்தது.
சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சம்பத் ஆகியோர், சிறைவாசிகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
சிறை வளாகத்தில் சிறைவாசிகள் உருவாக்கிய இயற்கை விவசாய பண்ணைகள், புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறை உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டனர்.
சிறப்பாக பணியாற்றிய ரவுடி மர்டர் மணிகண்டன் உட்பட பலருக்கு சிறந்த விவசாயி விருதை எம்.எல்.ஏ.,க்கள் வழங்கினர்.
தொடர்ந்து நடந்த பல்வேறு போட்டிகளில் சிறை வாசிகள் பங்கேற்று மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி, சிறை வாசிகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

