தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

 கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

 கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா


ADDED : ஜன 16, 2026 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 07:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதயா கல்லுாரியில், மாணவிகள் துறை வாரியாக 9 இடங்களில் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் பாத்திமா தலைமை தாங்கினார். பேராயர்கள் அந்தோணிசாமி, ஜோனாஸ், செழியன், பூலோகநாதன், மூலக்குளம் ஸ்டான்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் உஷா, ராமலிங்கம், சமுதாய கல்லூரி உதவி பேராசிரியர் முருகையன் பங்கேற்றனர்.

தொடர்ந்து விழாவில், மாணவிகளின் கலை நிகழ்ச்சி, சிலம்பம், ஒயிலாட்டம், கும்மி ஆட்டம் மற்றும் உறியடி நடந்தது.

சேக்கிழார் பள்ளி சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தட்டாஞ்சாவடி சமுதாய நலப்பணி திட்டம் சார்பில் நடந்த பொங்கல் விழாவிற்கு தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார். மேலாண்மை குழு உறுப்பினர் நாகராஜ், ரோட்டரி சங்க தலைவர் பாக்கியராஜ், என்.எஸ்.எஸ்., அலுவலர் முருகன் முன்னிலையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தாகூர் கல்லுாரி மாணவர்கள் பேராசிரியர்கள் இணைந்து துறை வாரியாக பொங்கல் வைத்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து பொங்கலின் சிறப்பை கவிதையாக வாசித்தனர். பொங்கல் சிறப்பு குறித்து கல்லுாரி முதல்வர் விளக்கினார். விழாவில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரத் பள்ளி வில்லியனுார் அடுத்த ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த பொங்கல் விழாவிற்கு பள்ளி நிர்வாகி சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக அதிகாரி சங்கீதா கிேஷார் வரவேற்றார்.

ஆசிரியர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து மாணவர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us