ADDED : ஜன 18, 2025 07:44 AM

புதுச்சேரி : புதுச்சேரி கவிஞர் தமிழ்ஒளி கல்வி வட்டம், ஈரம் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று பாத்திமா பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கபடி போட்டி நடந்தது. இதில், புதுச்சேரியை சேர்ந்த 7 பெண்கள் அணியும், 14 ஆண்கள் அணியும் கலந்து கொண்டன.
கபடி போட்டியை வழக்கறிஞர் லெனின் துரை, பேராசிரியர் இளங்கோ, கல்வி வட்ட நிர்வாகிகள் மேகராஜ், ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டியினை கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜானி, செல்வம் ஆகியோர் வழி நடத்தினர். ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன், சாமிபிள்ளை தோட்டம் ஊர் தலைவர் பார்த்திபன், தி.மு.க., நிர்வாகி பிரபாகரன், வழக்கறிஞர் முரளி ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.
ஏற்பாடுகளை அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க சேர்ந்த அவினாஷ் பிரகதி, ஹரி, ஸ்ரீ ஹரி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.