ADDED : ஜன 14, 2026 06:48 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில், மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில், தாமரை தைப்பொங்கல் விழா ராஜ்பவன் தொகுதியில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் 350 பெண்கள் கலந்து கொண்டு பானையில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில் கொண்டாடினர்.
விழாவில் சிறப்பு அழைப்பளராக பா.ஜ., எம்.பி.,பொறந்தேஸ்வரி கலந்து கொண்டார். மகளிர் அணி மாநில தலைவர் தாமரைச்செல்வி,மாநில துணைதலைவர் ஜெயலட்சுமி, நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ்,மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த கண்ணன்,நகர மாவட்ட மகளிர் அணி தலைவர் ராதா, மாநில மகளிர் அணி பொது செயலாளர்கள் விஜயலட்சுமி, பிரியா மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளைவல்லுநர் பிரிவு அமைப்பாளர் நாகராஜ் செய்திருந்தார்.
