/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வர் பொங்கல் வாழ்த்து
/
கவர்னர், முதல்வர் பொங்கல் வாழ்த்து
ADDED : ஜன 15, 2024 06:48 AM
புதுச்சேரி : புதுச்சேரி மக்களுக்கு கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் எம்.எல்.ஏ.,க்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி சுய சார்பு இந்தியாவை உருவாக்குவோம். அனைவரது வாழ்விலும், அன்பு, மகிழ்ச்சி, இன்பம், இனிமை நலமும், வளமும் பெருக வேண்டும் என வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; அனைவரது இல்லங்களிலும், வளர்ச்சி ஓங்கவும், மகிழ்ச்சி பொங்கவும், எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இதுதவிர சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், நமச்சிவாயம், தேனி ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எதிர்கட்சி தலைவர் சிவா, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், இந்திய கம்யூ., கட்சி மாநில செயலாளர் சலீம், ஒ.பி.எஸ்., அணி முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்திசேகர் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.