/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
/
பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ADDED : ஜன 20, 2025 06:19 AM

புதுச்சேரி: புதுச்சேரி, பாகூர் தொகுதிக்குட்பட்ட சோரியாங்குப்பம் கிராமத்தில் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
சோரியாங்குப்பம் கிராமத்தில் கலாம் புதுமை மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் பொங்கலையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
பாகூர் தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ., கடலுார் அழகப்பா நகைக்கடை உரிமையாளர் அசோக், போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். சங்கத்தலைவர் முரளி, கவுரவ தலைவர் ரமேஷ், செயலாளர் சுஜா, சிவராஜ், ஹரிபாரதி, சாவித்திரி, சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.