/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூரணாங்குப்பம் கோவில் கும்பாபிேஷக விழா
/
பூரணாங்குப்பம் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : செப் 05, 2025 02:49 AM

அரியாங்குப்பம்:பூரணாங்குப்பம் வில்லுக்கட்டி ஐயனாரப்பன் கோவிலில், நடந்த கும்பாபிேஷகத்தில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம், வில்லுக்கட்டி ஐயனராப்பன் கோவில், கும்பாபிேஷகத்தையொட்டி,கடந்த 1ம் தேதி, கோ பூஜை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. 2ம் தேதி முதல் மற்றும் இரண்டாம்கால யாகசாலை பூஜை, விசேஷ சகஸ்கர நாம பூஜைகள் நடந்தது.
நேற்று முன்தினம் 3ம் கால யாகசாலை பூஜை, சோம கும்ப பூஜைகள், வேத பாராயணம், திரவிய ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், 4ம் கால யாகசாலை பூஜை, கடம் புறப்பாடு, தொடர்ந்து கும்பாபிேஷகம் நடந்தது. சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.