ADDED : செப் 22, 2026 09:15 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில், தபால் ஓட்டுள் பதிவு செய்யும் பணி நேற்று துவங்கியது.
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தலில், வேட்பு மனுதாக்கல் முடிந்து, மொத்தம் 11 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். பிரதான கட்சிகள், சுயேச்சையகள் என பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் தகுதியானவர்களிடம் தபால் ஓட்டுகள் சேகரிக்கும் பணி நேற்று துவங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன்ராமகிருஷ்ணன் முன்னிலையில் தபால் ஓட்டுகள் சேகரிக்கும் பணி நடந்தது. தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் 105 தபால் ஓட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
