/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த அஞ்சல் ஊழியர்கள்
/
கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த அஞ்சல் ஊழியர்கள்
கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த அஞ்சல் ஊழியர்கள்
கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த அஞ்சல் ஊழியர்கள்
ADDED : பிப் 19, 2025 04:59 AM

புதுச்சேரி: அஞ்சலக ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
நாடு முழுவதும், அஞ்சல் துறையில், தற்போது 19,500 பட்டுவாடா அலுவலகங்கள் செயல்படுகிறது. இதனை மாற்றும் விதமாக, 'சுதந்திரமான டெலிவரி மையம்' மற்றும் 'மெஷினைஸ்டு பீட் டெலிவரி' என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத புதிய திட்டங்களை திணித்து, பாரம்பரிய அஞ்சல் துறையினை, மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதாக கூறி, அஞ்சல் துறை மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்தது.
புதுச்சேரி கோட்டத்தில், அதன் ஒரு பகுதியாக, அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கை அடங்கிய அட்டை அணிந்து, நேற்று முதல் பணி செய்யும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி தலைமை அஞ்சலக ஊழியர்கள், கோரிக்கை அடங்கிய அட்டை அணிந்து பணியாற்றினர். போராட்ட ஏற்பாடுகளை, தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்க செயலாளர் ரட்சகநாதன், 4ம் பிரிவு சங்க செயலாளர் கார்த்திகேயன், புறநிலை ஊழியர்கள் சங்க செயலார் ராஜகோபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.