தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூறைக்காற்றுடன் கனமழை 4 மணி நேரம் பவர் 'கட்'

சூறைக்காற்றுடன் கனமழை 4 மணி நேரம் பவர் 'கட்'

சூறைக்காற்றுடன் கனமழை 4 மணி நேரம் பவர் 'கட்'


ADDED : அக் 30, 2024 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் 4 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.

நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

இதன் காரணமாக, மடுகரை, மொளப்பாக்கம், சூரமங்கலம் பகுதியில் மரங்கள், மின்கம்பங்கள் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்த மடுகரை தீயணைப்பு துறையினர், பொதுப்பணித்துறை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தினர். இதனால் சூரமங்கலம், மொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. துணை சபாநாயகர் ராஜவேலு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us