/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை ஐ.டி.ஐ., நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம்
/
மின்துறை ஐ.டி.ஐ., நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம்
ADDED : மே 04, 2025 05:08 AM

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறை ஐ.டி.ஐ. நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், லெனின் வீதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.
சங்க தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரவி வரவேற்றார். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி, சங்க அமைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பொறுப்பாளர்கள் அன்பழகன், தேவகுமார், குமரன், ரவி, பாலச்சந்தர், பச்சையப்பன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் 2025-28ம் ஆண்டு வரையிலான நிர்வாகக்குழு தலைவராக செல்வம், பொதுச் செயலாளராக பிரபு, பொருளாளராக ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, சங்கத்தின் வளர்ச்சி மற்றும் நிலுவையில் உள்ள தீர்க்கப்படாத தொழிலாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிர்வாகத்திடம் வலியுறுத்தி பெறுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

