/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை தனியார் மயமாக்கல் பிரச்னை : கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
/
மின்துறை தனியார் மயமாக்கல் பிரச்னை : கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
மின்துறை தனியார் மயமாக்கல் பிரச்னை : கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
மின்துறை தனியார் மயமாக்கல் பிரச்னை : கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
ADDED : செப் 09, 2025 06:33 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, இண்டி கூட்டணி சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்த முன்னாள் முதல்வர், தி.மு.க., மாநில அமைப்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகை பேரணி நேற்று நடந்தது.
பேரணிக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினர். அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், சம்பத், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நந்தா சரவணன், இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., ராமச்சந்திரன், முருகன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜா தியேட்டர் அருகே துவங்கிய பேரணி நேரு வீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி சென்றபோது, சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலான போலீசார் நேரு வீதி- மிஷன் வீதி சந்திப்பில் சாலையின் நடுவே பேரிகார்டு அமைந்து பேரணியாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, மின்துறை தனியார் மயமாக்குவதை கண்டித்து, மாநில அமைப்பாளர் சிவா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் போலீஸ் பேரிகார்டு மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
பின் போலீஸ் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் போலீசாருக்கும்- இண்டியா கூட்டணி கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, போலீசார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில அமைப்பாளர் சிவா உட்பட அனைவரையும் கைது செய்து, எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் தங்க வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.