/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவி தொகை உயர்த்த கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா
/
உதவி தொகை உயர்த்த கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா
உதவி தொகை உயர்த்த கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா
உதவி தொகை உயர்த்த கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா
ADDED : அக் 22, 2024 05:59 AM

புதுச்சேரி: உதவி தொகையை ரூ. 20 ஆயிரமாக உயர்த்த கோரி, ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாகி ராஜிவ்காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரியில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு, ஊக்கத் தொகை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி தரப்படும் என, முதல்வர் ரங்கசாமி கடந்த 2022 சட்டசபையில் அறிவித்தார். ஆனால், இதுவரை உயர்த்தப்படவில்லை. இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மாகி ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் நேற்று, புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகே ஆயுஷ் இயக்குனரகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வெளியே வந்த துறை இயக்குனர் ஸ்ரீதரனை சூழ்ந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையிட்டனர். இது தொடர்பாக துறை செயலரை கலந்து ஆலோசித்து, நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
லெட்டர் பேடுகளுக்கு எதிர்ப்பு:
பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாணவர்கள் நலம் விரும்பிகள் என்ற போர்வையில் லெட்டர் பேடு அமைப்பினர் போராட்ட களத்திற்கு வந்தனர். அவர்களிடம், எங்களுடைய போராட்டத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீங்கள் கிளம்பலாம் என்று கடுமையாக எச்சரித்து பயிற்சி மருத்துவர்கள் அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.