தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

 மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

 மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


ADDED : நவ 18, 2025 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2025 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.

இக்கோவிலில், கார்த்திகை சோமவார பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.

இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 4:30 மணிக்கு கார்த்திகை சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us